dinamalar telegram
Advertisement

இன்றைய விளையாட்டு ரவுண்ட் அட் | 21-11-2020 | Sports News Roundup | Dinamalar

ண்டனில் ஆண்களுக்கான ஏ.டி.பி., பைனல்ஸ் டென்னிஸ் தொடர் நடக்கிறது. இதன் 'பி' பிரிவு லீக் போட்டியில் ஸ்பெயினின் ரபெல் நடால், கிரீசின் ஸ்டெபானஸ் டிசிட்சிபாஸ் மோதினர். இதில் நடால் 6-4, 4-6, 6-2 என்ற கணக்கில் வெற்றி பெற்றார். மூன்று போட்டியில், 2 வெற்றி, ஒரு தோல்வியை பெற்ற நடால், அரையிறுதிக்கு தகுதி பெற்றார். ----- கெய்ல், மலிங்கா விலகல் இலங்கையில், லங்கா பிரிமியர் லீக் 'டுவென்டி--20' கிரிக்கெட் தொடரின் முதல் சீசன் நவ. 26 முதல் டிச. 16 வரை நடக்கவுள்ளது. இதில் கண்டி அணியில் ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்த விண்டீசின் கிறிஸ் கெய்ல், இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் பிளங்கட், காலே அணியில் இடம் பிடித்திருந்த இலங்கை வேகப்பந்துவீச்சாளர் லசித் மலிங்கா விலகினர். ----- பெண்கள் உலக கோப்பை ஒத்திவைப்பு தென் ஆப்ரிக்காவில், வரும் 2022, நவம்பரில் பெண்களுக்கான 'டுவென்டி-20' உலக கோப்பை கிரிக்கெட் தொடர் நடக்க இருந்தது. இந்நிலையில் கொரோனா பரவல் மற்றும் 2022 காமன்வெல்த் விளையாட்டில் பெண்களுக்கான 'டுவென்டி-20' போட்டி சேர்ப்பு காரணமாக இத்தொடரை வரும் 2023, பிப்ரவரி 9-26ம் தேதிக்கு சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் ஒத்திவைத்தது.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement