dinamalar telegram
Advertisement

7 மாத பிரிவுக்கு பின் சந்தோஷ சந்திப்பு

குழந்தைகளின் பிறந்த நாள்தான் பெற்றோருக்கு திருநாள். செல்வம் .... சங்கீதா தம்பதியருக்கும் அப்படித்தான். புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள கோட்டப்படி சொந்த ஊர். 15 ஆண்டாக மும்பையில் பெட்டிக்கடை நடத்தி வருகின்றனர். மார்ச் மாத மத்தியில் ஊருக்கு வந்து, குழந்தைகள் வேணி, யோகேஸ்வரனை பாட்டி வீட்டில் லீவுக்காக விட்டனர். 2 வாரத்தில் வருவதாக கூறிவிட்டு மும்பைக்கு திரும்பினர். கொரோனா எல்லா பிளானையும் புரட்டிப் போட்டு விட்டது. அக்டோபர் 28ம்தேதி யோகேஸ்வரனுக்கு பிறந்த நாள். ஊருக்கு திடுதிப்பென வந்து மகனுக்கு சர்ப்ரைஸ் கொடுக்க செல்வம், சங்கீதா தீர்மானித்தனர். மும்பையில் இருந்து சென்னைக்கு ரயில் சேவை இன்னும் தொடங்கவில்லை. விமானத்தில் வர பணமில்லை. குழந்தைகளை பார்த்து 7 மாதங்களாகி விட்டது. இனியும் பொறுமையாக இருக்க மனமும் இல்லை. ஸ்கூட்டியிலேயே கிளம்பி விட்டனர். 3 நாளில் 1,400 கிலோ மீட்டர் பயணத்தை நிறைவு செய்து, கோட்டப்பட்டிக்கு வந்து சேர்ந்தனர். அம்மா அப்பாவை பார்த்ததும் யோகேஸ்வரனுக்கு சந்தோஷம் தாளவில்லை. ஓடிவந்து கட்டிக் கொண்டான். நீண்டதூர ஸ்கூட்டி பயணம் புதிய அனுபவமாக இருந்தது. பெட்ரோல் செலவு 3,000 ரூபாய்க்கும் குறைவாகத்தான் ஆனது; ஃப்ளைட்டில் வந்திருந்தால் 10,000 செலவாகியிருக்கும்; மிச்சத்தில் பிள்ளைக்கு நல்ல கிப்ட் வாங்கி தரப்போவதாக செல்வம் மகிழ்ச்சியுடன் சொன்னார்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments (1)


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து (1)
இராமன்
இராமன் - . 28-அக்-2020 06:47 IST

கடினமான பயணம் பிள்ளைகளை கண்டவுடன் ஆனந்தமாகி உள்ளது. சகோ, திரும்பி போகும்போது தலை கவசம் அணிந்து செல்லுங்கள்.

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement