dinamalar telegram
Advertisement

நான் யாருக்கும் தத்துப்பிள்ளை இல்லை

தேனி மாவட்டம் பெரியகுளம் சில்வார்பட்டி மாதிரி அரசு பள்ளியில் தமிழ்வழியில் பிளஸ் 2 படித்த மாணவர் ஜீவித் குமார் நீட் தேர்வில் 664 மார்க் எடுத்து தேசிய அளவில் சாதனை படைத்தார். நீட் எழுத விரும்பும் அரசு பள்ளி மாணவர்களுக்கு ஒரு உற்சாகத்தை ஜீவித்குமாரின் வெற்றி கொடுத்துள்ளது. இந்நிலையில், ஜீவித்குமாரை தான் தத்தெடுத்து உதவிகள் செய்து படிக்க வைத்ததாக மதுரையைச் சேர்ந்த சபரிமாலா ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். 2017 ல் மாணவி அனிதா தற்கொலையால் நீட் தேர்வுக்கு எதிர்ப்பு கிளம்பியபோது அரசு பள்ளியில் ஆசிரியை வேலையை ராஜினாமா செய்து விட்டு நீட்டுக்கு எதிராக போராட தொடங்கினார், சபரிமாலா. ஜீவித் குமாரை பாரதிய ஜனதா கட்சியினர் மிரட்டுவதாகவும் வீடியோவில் அவர் கூறியிருந்தார்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments (1)


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து (1)
Sami Sam
Sami Sam - chidambaram ,இந்தியா . 21-அக்-2020 18:22 IST

வெற்றிபெற்றால் நான் தான் காரணம் என்று சொல்லிக்கொண்டு பலர் வருவார்கள் தோல்வியடைந்தால் திரும்பிக்கூட பார்க்க மாட்டார்கள்

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement