dinamalar telegram
Advertisement

இன்றைய விளையாட்டு ரவுண்ட் அட் | 11-10-2020 | Sports News Roundup | Dinamalar

சென்னை அணிக்கு 5வது தோல்வி துபாயில் நடந்த ஐ.பி.எல்., லீக் போட்டியில் சென்னை, பெங்களூரு அணிகள் மோதின. 'டாஸ்' வென்ற பெங்களூரு அணி கேப்டன் கோஹ்லி, 'பேட்டிங்' தேர்வு செய்தார். பெங்களூரு அணிக்கு கேப்டன் கோஹ்லி 90, தேவ்தத் படிக்கல் 33 ரன் எடுத்து கைகொடுக்க, 20 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 169 ரன்கள் எடுத்தது. சென்னை அணி சார்பில் ஷர்துல் தாகூர் 2 விக்கெட் கைப்பற்றினார். சவாலான இலக்கை விரட்டிய சென்னை அணிக்கு அம்பதி ராயுடு 42, ஜெகதீசன் 33 ரன் எடுத்து நம்பிக்கை அளித்தனர். மற்றவர்கள் ஏமாற்ற, சென்னை அணி 20 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 132 ரன்கள் மட்டும் எடுத்து 37 ரன் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. பெங்களூரு சார்பில் கிறிஸ் மோரிஸ் 3 விக்கெட் கைப்பற்றினார்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement