LOGIN
dinamalar telegram
Advertisement

மொபைல் வாங்கிக்கொடுத்த பெண் இன்ஸ்பெக்டர்

சென்னை பழைய வண்ணாரப்பேட்டையை சேர்ந்த 13 வயது சிறுவன் அங்குள்ள மாநகராட்சிப்பள்ளியில் 8 ம் வகுப்பு படிக்கிறான். அப்பா பிஸ்கட் கடையில் வேலை பார்க்கிறார். அம்மா, கூலிவேலை பார்க்கிறார். அப்பாவுக்கு குடிப்பழக்கம் இருந்ததால் வீட்டுக்கு சரிவர பணம் கொடுப்பதில்லை. இதனால் குடும்பம் வறுமையில் வாடியது. ஆன்லைன் வகுப்புக்கு செல்போன் வாங்கித்தரும்படி சிறுவன் கேட்டான். தன்னிடம் பணமில்லை என தாய் கூறி விட்டார். செல்போன் இல்லாததால் ஆன்லைன் வகுப்பில் பங்கேற்காமல் தெருவில் சுற்றித் திரிந்தான். சிறுவனின் நிலையை புரிந்து கொண்ட அதே பகுதியைச் சேர்ந்த திருட்டு ஆசாமிகள் மணிகண்டன், ராஜிவ் அவனுக்கு சாப்பாடும் தின்பண்டங்களும் வாங்கிக் கொடுத்து தங்கள் வசப்படுத்தினர். தாங்கள் சொல்லும் வேலையைச் செய்தால் செல்போன் வாங்கித் தருவதாக கூறி அழைத்துச் சென்றனர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement