LOGIN
dinamalar telegram
Advertisement

குறைந்தபட்ச ஆதாரவிலை உண்டு; மோடி விளக்கம்

விவசாயத் துறையில் சீர்திருத்தங்களை கொண்டு வரும் வகையில் 3 மசோதாக்கள் லோக்சபாவில் நிறைவேற்றப்பட்டுள்ளன. இடைத்தரகர்கள் இல்லாமல் விவசாய பொருட்களை நல்ல விலைக்கு விவசாயிகளே விற்பதை இம்மசோதாக்கள் உறுதி செய்கின்றன. ஆனால் இம்மசோதாக்களால் அரசின் குறைந்தபட்ச ஆதார விலை கிடைக்காமல் போய் விடும்; மண்டி வியாபாரிகளும், கமிஷன் ஏஜெண்ட்களும் கடுமையாக பாதிக்கப்படுவார்கள் என காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவிக்கின்றன. இதுதொடர்பாக பிரதமர் மோடி விளக்கமளித்துள்ளார். விவசாய மசோதாக்கள் பற்றி வதந்திகள் பரப்பப்படுகின்றன. இனி, விவசாயிகளிடம் இருந்து நெல் கோதுமையை அரசு கொள்முதல் செய்யாது என தவறான தகவலை பரப்புகிறார்கள். இது முழுக்க முழுக்க வடிகட்டிய பொய். விவசாயிகளை ஏமாற்றுவதற்காக இந்த பொய்யை பரப்பி விடுகிறார்கள். விளை பொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதாரவிலை வழங்கும் திட்டம் இன்று போல என்றும் வழங்கப்படும். விவசாய பொருட்களை அரசு தொடர்ந்து கொள்முதல் செய்யும் என பிரதமர் உறுதியளித்தார்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement