LOGIN
dinamalar telegram
Advertisement

மூச்சுத்திணறல் ஏற்பட்டதாக தகவல்

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கொரோனாவால் பாதிக்கப்பட்டு, ஆகஸ்ட் 2ம்தேதி குர்கானில் உள்ள மேதாந்தா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். ஆகஸ்ட் 14ல் அவர் குணமடைந்து, டிஸ்சார்ஜ் ஆனார். வீடு திரும்பியதில் இருந்து அமித் ஷா சோர்வாக காணப்பட்டார். உடல் வலியும் கடுமையாக இருந்தது. அதன் காரணமாக ஆகஸ்ட் 18 ம்தேதி டில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அட்மிட் செய்யப்பட்டார். 13 நாள் சிகிச்சைக்குப் பின் உடல் நலம் தேறினார். 31ம் தேதி டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். 12 நாட்களாக ஓய்வில் இருந்த அமித் ஷா, நேற்று நள்ளிரவில் திடீரென எய்ம்ஸ் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். மூச்சுத் திணறல் ஏற்பட்டதால் அவர் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டதாக டில்லி வட்டாரங்கள் தெரிவித்தன.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement