LOGIN
dinamalar telegram
Advertisement

பக்தர்கள் எதிர்ப்பால் ஒட்டலுக்கு பூட்டு

சென்னை மந்தைவெளி மார்க்கெட்டில் அமைந்துள்ள பழமையான தண்டு மாரியம்மன் கோயில் ஒட்டி , எட்டு மாதங்களுக்கு முன் பிரியாணி கடை திறக்கப்பட்டது. அதன் பின் ஊரடங்கு அறிவிக்கப்பட்டதால் கோயில் மூடப்பட்டது. அரசு அறிவிப்பின் பிறகு செப்டம்பர் 1 ஆம் தேதி பூசாரி ஜெயராமன் கோயிலை திறக்கசென்றார். வாசலில் மது பாட்டில்கள் இருந்ததை பார்த்து வேதனை அடைந்தார் . பக்கத்து கடையில் பிரியாணி சாப்பிட்டு குடிகாரர்கள் கோயில் முன் ஆட்டம் போட்டதை அவர் தெரிந்துக்கொண்டார். பிரியாணி ஓனரிடம் கடையை அகற்றும் படி கேட்டு பூசாரி பேசினார். ஆனால் அவர் மதிக்கவில்லை. கோயிலை மூடி பூசாரி இதற்கு எதிர்ப்பு தெரிவித்தார் . “கோயிலின் அருகினிலே அசைவம் சமைத்து விற்பதனால் ஏற்படும் தர்ம சங்கடங்கால் கோயில் மூடி வைக்கப்படுகிறது “ என்ற அறிவிப்பு பேனரை தொங்கவிட்டார்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments (1)


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து (1)
வேதவல்லி
வேதவல்லி - . 05-செப்-2020 15:28 IST Report Abuse

ஒருபுறம் கோயிலில் ஓட்டுக்காக வழிபாடு மறுபுறம் கோயிலுக்கு மறைமுக எதிர்ப்போடு. சங்கடம்

Rate this:
Reply

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement