LOGIN
dinamalar telegram
Advertisement

தொலைந்தவர் கிடைத்த மகிழ்ச்சியில் குடும்பம்

சென்னையை சேர்ந்த சமூக ஆர்வலர் பாபு, கடந்த ஐந்து ஆண்டுகளாக சாலையோர மக்களை குளிப்பாட்டி , உணவளித்து காப்பகத்தில் சேர்க்கும் சேவையை செய்து வருகிறார். ஊரடங்கிலும் அக்கறையோடு சேவை செய்து வரும் பாபுவை பற்றி தினமலர் இணையதளத்தில் வீடியோ செய்தி வெளியிடபட்டது. https://youtu.be/KcXjwqL0qu4 சாலையோரம் அமர்ந்திருந்த மனநலம் பாதிக்கப்பட்ட பாலசுப்ரமணியன் என்பவருக்கு பாபு சேவை செய்யும் காட்சி அதில் இடம்பெற்றிருந்தது. சிங்கப்பூரில் உள்ள பாலசுப்ரமணியனின் உறவினர் இந்த வீடியோவை பார்த்ததும், கள்ளக்குறிச்சி கணியமூரில்உள்ள பாலசுப்ரமணியனின் தம்பி தனசேகருக்கு தகவல் கொடுத்தனர். குடும்பத்தினர் சென்னை தினமலர் அலுவலகத்தை தொடர்பு கொண்டனர் . சமூக ஆர்வலர் பாபுவின் உதவியோடு ஆகஸ்ட் 22ம் தேதி சுப்ரமணியனை கண்டுபிடித்து சொந்த ஊருக்கு அழைத்து சென்றனர். மூன்று மாதங்களுக்கு முன் காணாமல் போன பாலசுப்ரமணியன், வீட்டுக்கு திரும்பி வந்ததில் குடும்பத்தினர் மகிழ்ச்சியில் உள்ளனர். பாபு - சமூக ஆர்வலர் / 9500147895
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement