Advertisement

கண்டுபிடித்த ஓனர் கொடுத்த இன்ப அதிர்ச்சி

கல்விக்கட்டணம் செலுத்த முடியாமல் வறுமையில் தவிக்கும் பல ஆயிரம் பேரில் இந்தூர் ப்ளஸ் 2மாணவியும் ஒருத்தி. ப்ளஸ் ஒன்னில் 71சதவீதம் மார்க் எடுத்திருந்தாள். ஆகஸ்ட் முதல் வாரத்தில் டெர்ம் பீஸ் கட்டியாக வேண்டும். அப்பாவுக்கு உடம்பு சரியில்லை. வீட்டு வேலை பார்க்கும் அம்மாவிடம் பணம் இல்லை. டிடெக்டிவ் ஏஜென்சிகாரர் தீரஜ் துபே Dheeraj dubey வீட்டிலும் அம்மா வேலை செய்கிறார். சம்பவத்தன்று அம்மாவுடன் துபே வீட்டுக்கு சென்ற மாணவி செல்போனை திருடி வந்தாள். புத்தம்புது செல்போனை ப்ரண்ட் மூலம் 2,500 ரூபாய்க்கு அடகு வைத்தாள். செல்போன் திருட்டு பற்றி போலீசில் புகாரளித்த துபே, சம்பவத்தன்று வீட்டுக்கு வந்தவர்களின் லிஸ்ட்டை தயார் செய்தார். வீட்டு வேலை செய்யும் பெண்ணுடன் வந்த மகள் மீது சந்தேகம் ஏற்பட்டது. செல்போனை எடுத்தாயா? என கேட்டார். இல்லை என்றாள் மாணவி. அம்மாகிட்ட சொல்லவா? என துபே கேட்டதும் மாணவி உண்மையை ஒப்புக்கொண்டாள். சார்.. டெர்ம் பீஸ் 1,600 ரூபாய் கட்டணும் புக் வாங்க 1,200 ரூபாய் வேணும்.. ஸ்கூலை விட்டு நீக்கிடுவாங்களோனு திருடிட்டேன். மன்னிச்சிடுங்க சார் என அழுதாள். அடகு வைத்த பணத்தில் ஒரு ரூபாயைக்கூட செலவழிக்காமல் அப்படியே கையில் வைத்திருந்தாள். உங்க போனை நான் விக்கலை. ஏன் தெரியுமா சார்? ப்ளஸ் 2 முடிச்சதும் வேலைக்கு போய் முதல் வேலையா உங்க போனை மீட்டு கொடுக்க நினைச்சிருந்தேன் என, மாணவி சொன்னதும் துபே நெகிழ்ந்துபோனார். ஓகே.. நீ ஃபீசை கட்டு; புக் வாங்கு என்றவர், மாணவியின் ப்ரண்டை அழைத்து 2,500 ரூபாயை கொடுத்து, போனை மீட்டு வரச்சொன்னார். போலீஸ் புகாரை திரும்ப பெற்றார். கல்லூரி படிப்பை தொடர உதவி செய்வதாக மாணவியிடம் உறுதியளித்த தீரஜ் துபே, 18 வயது நிரம்பியதும் பார்ட்டைம் வேலை வாங்கித்தருகிறேன் என தைரியமும் கொடுத்தார். திருடுவது தப்புதான்; என்னை போலீசில் ஒப்படைக்காம உதவி செஞ்ச துபே சாருக்கு நன்றிக்கடன் பட்டிருப்பேன்னு மாணவி உருக்கத்துடன் சொன்னாள்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

Advertisement