Advertisement

பயங்கர விபத்திலும் கைகொடுத்த அதிர்ஷ்டம்

கோழிக்கோட்டில் ஏர் இண்டியா விமானம் பள்ளத்தாக்கில் விழுந்து இரண்டு துண்டானதில் 18 பேர் பலியாயினர். சீட்டை மாற்றி உட்கார்ந்ததால் ஒரு தாயும் குழந்தையும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியுள்ள தகவல் வெளிவந்துள்ளது. மலப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்தவர் ஷலீகா. Saleekha, வயது 24. இவர் குழந்தை லைபா laiba. துபாயில் சூப்பர் மார்க்கெட்டில் வேலை பார்க்கும் கணவரை பார்க்க மார்ச் துவக்கதில் சென்றார். கொரோனா, விபத்து என இரண்டு கண்டத்தை தாயும் மகளும் தாண்டி பத்திரமாக ஊர் திரும்பியுள்ளனர். ஷலீகாவுக்கும், லைபாவுக்கும் விமானத்தின் முன் வரிசையில்தான் சீட் ஒதுக்கப்பட்டிருந்தது. துபாயில் விமானத்தில் ஏறியபோதுதான் தன் தோழி, விமானத்தின் நடுப்பகுதியில் உட்கார்ந்திருப்பதை ஷலீகா பார்த்தார். தோழியை பார்த்ததும் அவர் பக்கத்தில் அமர ஷலீகா விரும்பினார். தோழி பக்கத்தில் உட்கார்ந்திருந்த 2 பேரிடம் ஷலீகா விஷயத்தை சொல்ல, அவர்கள் மறுப்பேதும் சொல்லாமல் முன்வரிசைக்கு சென்றனர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

Advertisement