Advertisement

ரன்வேயில் சறுக்கிக்கொண்டு ஓடி பள்ளத்தில் விழுந்தது

வெளிநாடுகளில் சிக்கிய இந்தியர்களை மீட்டு வர வந்தே பாரத் திட்டத்தின் கீழ் சிறப்பு விமானங்களை ஏர் இண்டியா இயக்கி வருகிறது. துபாயில் இருந்து 184 பயணிகளுடன் ஏர் இண்டியா எக்ஸ்பிரஸ் விமானம் இன்று கோழிக்காட்டுக்கு புறப்பட்டது. 2 பைலட்டுகள், 5 சிப்பந்திகளும் விமானத்தில் இருந்தனர். இரவு 7.40 மணிக்கு கோழிக்காடு ஏர்போர்ட்டில் விமானம் தரையிறங்கியது. அப்போது, பலத்த மழை பெய்து கொண்டிருந்ததால் எதிர்பாராதவிதமாக விமானம் சறுக்கிக் கொண்டு ஓடியது. இந்த விபத்தில் விமானம் இரண்டு துண்டுகளாகிப் போனது. இதில் ஒரு பைலட் உட்பட 11 பேர் இறந்தனர். இன்னொரு பைலட்டின் நிலை கவலைக்கிடமாக உள்ளது. 50க்கு மேற்பட்ட பயணிகள் பலத்த காயமடைந்ததாக கூறப்படுகிறது. விமானம் இரண்டாக பிளந்திருப்பதால் உயிரிழப்பு அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது. பேரிடர் மீட்புப்படையினர் விரைந்து சென்று பயணிகளை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

Advertisement