Advertisement

கல்யாண வீடியோவில் பெய்ரூட் கோரக்காட்சிகள்

லெபனான் நாட்டைச் சேர்ந்த இஸ்ரா செப்லானி Dr. Israa Seblani அமெரிக்காவில் டாக்டராக உள்ளார். இஸ்ராவுக்கும், தொழிலதிபர் அகமது சுபைக்கும் Ahmad Subeih பெய்ரூட்டில் திருமணம் நடந்தது. அங்குள்ள அழகிய சைஃபி Saifi ஸ்கொயரில் கல்யாண வீடியோ எடுத்துக்கொண்டிருந்தனர். திருமண டிரஸ்ஸில் இஸ்ரா சிரித்தபடி போஸ் கொடுத்துக் கொண்டிருந்தார். தூரத்தில் வெடிச் சத்தம் கேட்டது. எங்கேயோ குண்டு வெடிக்கிறது என நினைத்தபடி இஸ்ரா போஸ் கொடுத்தார். அது, பெய்ரூட் துறைமுக குடோனில் நடந்த வெடிவிபத்து என்பதை இஸ்ரா அறிந்திருக்கவில்லை. அடுத்த வினாடியில் நடந்த வெடி விபத்து மிகவும் பயங்கரமானதாக இருந்தது. அதிர்வு கடுமையாக இருந்ததால் ஆடினார், இஸ்ரா. மணமக்கள் அதிர்ஷ்டவசமாக காயமின்றி தப்பினர். அருகிலுள்ள கட்டடத்துக்குள் ஓடினர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments (1)


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து (1)
THINAKAREN KARAMANI
THINAKAREN KARAMANI - Vellore,இந்தியா . 07-ஆக்-2020 21:38 IST Report Abuse

வெடி குண்டு விபத்திலிருந்து அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய மணமக்கள் நீடுழி வாழ்க.. THINAKAREN KARAMANI, VELLORE, INDIA.

Rate this:
Reply

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

Advertisement