Advertisement

வெள்ள பெருக்கை கண்காணிக்க மென்பொருள்

மத்திய கல்வி அமைச்சகம், அகில இந்திய தொழில் நுட்ப கல்வி கழகம் சார்பில் ஆண்டுதோறும் மாணவர்களுக்கான ஸ்மார்ட் இந்தியா ஹேக்கத்தான் போட்டி நடைபெறும். நாடு முழுவதும் நடைபெறும் இந்த போட்டியில் தொழில்நுட்ப யுகத்தில் இருக்கும் புதிய சவால்களுக்கு தீர்வு காணும் மென்பொருளை உருவாக்கும் முயற்சியில் மாணவர்கள் ஈடுபடுவர். போட்டியில் கலந்துகொள்ளும் மாணவர்களிடம் மோடி காணொலி மூலம் உரையாடுவது வழக்கம். இந்த ஆண்டு கோவை ஸ்ரீ கிருஷ்ணா பொறியியல் கல்லூரியில் நடந்த உரையாடலில் M.sc software system படிக்கும் தமிழக மாணவி ஸ்வேதா பிரதமரிடம் பேசினார். வெள்ள பெருக்கில் கரை உடைந்து ஊருக்குள் தண்ணீர் வருவதை முன்கூட்டியே கண்டுபிடிக்கும் மென்பொருளை பற்றி பிரதமருக்கு விவரித்தார்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments (1)


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து (1)
J.V. Iyer
J.V. Iyer - Singapore,சிங்கப்பூர் . 05-ஆக்-2020 18:12 IST Report Abuse

உங்கள் முயற்சி வெற்றிபெற வாழ்த்துக்கள் பாராட்டுக்கள்.

Rate this:
Reply

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

Advertisement