dinamalar telegram
Advertisement

3 ஆயிரம் பேர் படுகாயம் | BeirutBlast | Lebanon

மேற்குஆசிய நாடு லெபனான். இதன் தலைநகர் பெய்ரூட்டில் உள்ள துறைமுகம் மற்றும் அதன் அருகிலுள்ள குடோன் என 2 இடங்களில் நேற்று மாலை அடுத்தடுத்து குண்டு வெடிப்புகள் நடந்தது. இதனால் நகரமே தீப்பிழம்பானது. பல கட்டடங்கள் நொறுங்கின. ஏராளமான கட்டடங்கள் குலுங்கின. குண்டுவெடிப்பில் 73 பேர் பலியாயினர். ஆயிரக்கணக்கானோர் காயமடைந்தனர். லெபனான் பிரதமர் ஹசன் தியாப் Hassan Diab கூறுகையில் தலைநகரையே அழிக்க திட்டமிட்டு குண்டு வெடிப்பை சதிகாரர்கள் நடத்தியுள்ளனர். 2,750 டன் எடையுள்ள அம்மோனியம் நைட்ரேட் வெடிபொருள் பயன்படுத்தப்பட்டுள்ளது என்றார். தலைநகர் மட்டுமல்ல; லெபனான் சிறிய நாடு என்பதால் நாடு முழுக்க குண்டுவெடிப்புச் சத்தம் கேட்டது. அடுத்து என்ன நடக்குமோ? என மக்கள் அதிர்ச்சியில் உறைந்துபோயுள்ளனர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement