Advertisement

வீட்டிற்கே வந்து பாடம் எடுத்த மஹாலட்சுமி

கடலூர், பண்ருட்டி அடுத்த நடுவீரப்பட்டு அரசு மேல்நிலைப்பள்ளியில் தமிழ் ஆசிரியையாக பணிபுரிபவர் மகாலட்சுமி. 8 ஆண்டுகளாக இந்த பள்ளியில், 6ஆம் வகுப்பு முதல் 10 வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பாடம் எடுக்கிறார். மகாலட்சுமியின் சொந்த ஊர் பள்ளிக்கு அருகே உள்ள பாலூர். பொதுமுடக்கத்தால் தன்னால் முயன்றதை செய்ய நினைத்த இவர், அருகில் உள்ள கிராமங்களுக்கு சென்று கொரோனா குறித்தும், அதிலிருந்து பாதுகாப்பது குறித்தும், விழிப்புணர்வு ஏற்படுத்தினார். அரசு, 10 நாட்களுக்கு முன்பு, மாணவர்களுக்கு புத்தகங்களை வழங்கியது. அதனை தொடர்ந்து, 10ஆம் வகுப்பு மாணவர்களின் வீடு தேடி சென்று, இடைவெளி விட்டு, மாஸ்க் அணிந்து பாடங்களை நடத்தி வருகிறார்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

Advertisement