Advertisement

செய்தி சுருக்கம் | 1 PM BULLETIN | 31-07-2020 | Short News Round Up | Dinamalar

சென்னையில் 3 மெட்ரோ ரயில் நிலையங்களின் பெயரை தமிழக அரசு மாற்றியுள்ளது. ஆலந்தூர் மெட்ரோ இனி ”அறிஞர் அண்ணா ஆலந்தூர் மெட்ரோ” என எழுதப்படும். சென்ட்ரல் மெட்ரோவின் புது பெயர் ”புரட்சி தலைவர் டாக்டர் எம்.ஜி.ராமச்சந்திரன் சென்ட்ரல் மெட்ரோ”. கோயம்பேடு மெட்ரோவுக்கு முன்னால் ”புரட்சி தலைவி டாக்டர் ஜெ.ஜெயல்லிதா புறநகர் பேருந்து நிலையம்” என்பதை சேர்த்து முதல்வர் பழனிசாமி உத்தரவு போட்டுள்ளார். சென்னையில் கொரோனா தொற்று பாதிப்பு இன்று ஒரு லட்சம் தொடுகிறது. 12,785 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுகின்றனர். 83,890 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். சென்னையில் உள்ள 15 மண்டலங்களில் அதிக பட்சமாக கோடம்பாக்கத்தில் 1,613 பேர் சிகிச்சை பெறுகின்றனர். அண்ணாநகர், அம்பத்தூர், அடையார் அடுத்த இடங்களை பிடித்துள்ளன.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

Advertisement