Advertisement

ம.பி.யை அடுத்து ராஜஸ்தான் கூத்து

மத்ய ப்ரதேஷ்லயும் ராஜஸ்தான்லயும் காங்ரஸ் ஜெயிச்சுது. யார் முதல்வரா இருக்கணும்னு முடிவு செஞ்சப்ப சோனியா மத்தியஸ்தம் பண்ணாரு. ”கமல் நாத்துக்கு 72 வயசு. அனுபவசாலி. அவர் சீயெம்மா இருக்கட்டும். நீ துணை முதல்வரா இருந்து நிர்வாகம் கத்துக்கோ. அப்றம் சீயெம் ஆகலாம்”னு ஜோதிர் ஆதித்ய சிந்தியாட்ட சொன்னார். சிந்தியா வயசு 46. “அசோக் கெலாட்டுக்கு 70 ஆக போகுது. அவர் சீயெம்மா இருக்கட்டும். நீ டெபுடி சீயெம்மா இருந்து நல்லா கத்துக்கோ. அப்றம் சீயெம் ஆகலாம்”னு ச்ச்சின் பைலட் கிட்ட சொன்னார். சச்சின் வயசு 40. வாரிசுகள் சரின்னாங்க. ஆட்சி போய்ட்டு இருந்துது. ஆனா, தான் சொன்னத எல்லாம் சீயெம் ஏத்துக்கலைனு சிந்தியாக்கு கோபம். தனக்கு சப்போட்டா இருக்ற எம்.எல்.ஏ.க்கள கூட்டிகிட்டு பிஜேபில சேந்து, கமல்நாத் ஆட்சிய கவுத்தாரு. ஆனா, சீயெம் போஸ்ட் தரல. மத்ய மந்திரி ஆக்றோம்னு சொல்லி எம்.பி.யாக்னார் அமித் ஷா. இதே வேலய ராஜஸ்தான்ல சச்சின் செய்றதா இருந்தாரு. ரெண்டு பேரும் பேசி வச்சுதான் இறங்கினாங்க. ச்ச்சின் கொஞ்சம் லேட் ஆயிருச்சு. இப்ப அசோக் கெலாட் நாற்காலி ஆடிட்டு இருக்கு. சோலி முடிஞ்சிரும்னு வச்சுக்குங்க. இந்த மாதிரி ட்ராமா நம்ம அரசியல்ல ரொம்ப சகஜம். இதுல என்ன கவனிக்கணும்னா. இந்தியாவ பொருத்த வரைக்கும் 65, 70 வயசுக்கு அப்றமாதான் அரசியல்வாதிகள் கைல அதிகாரம் குவியுது. விதிவிலக்குகள் இருக்கு. ஆனா அதுல்லாம் நீடிக்கல. இந்த இளவரசர்கள் அவசர பட்றாங்க. பொறுத்தார் பூமி ஆள்வார்னு சொன்னது இவங்களுக்கு புரியல. சீனியரோட டார்ச்சர், இன்சல்ட் எல்லாத்தையும் தாங்கிகிட்டு சைலன்டா இருக்றதும் ஒரு ட்ரெய்னிங்னு இவங்களுக்கு தெரியல. சுருக்கமா சொல்லணும்னா அனுபவம் பத்தல.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments (1)


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து (1)
மாயவரம் சேகர்
மாயவரம் சேகர் - . 13-ஜூலை-2020 16:43 IST Report Abuse

அதே குடும்பம் வாரிசு என்றால் பொறுக்கலாம். இதில் சச்சின் மற்றும் சிந்தியா முதலமைச்சர் குடும்பம் இல்லையே. ராதாவுக்கு பிரசினை இல்லை.அகிலேஷ்க்கு , ஸ்டாலின் அவர் மகன் உதயநிக்கு பிரசினை இல்லை. அன்பழகன் போல் அடுத்த நிலையிலேயே அமுக்கி வைக்கப்படலாமே.அதனால் இந்த இளவரசர்களின் கோபம் நியாயமானதுதான்.

Rate this:
Reply

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

Advertisement