Advertisement

ஹரியானா காவலர்கள் பெருமிதம்

ஹரியானா சோனிபட் மாவட்டத்தை சேர்ந்த இரண்டு கான்ஸ்டெபிள்கள் ரவிந்தர் மற்றும் கப்டன் இரவு பணியில் போது, தெருவில் குடித்து ஆட்டம் போட்ட 6 இளைஞர்களை தடுத்து மது பாட்டில்களை உடைத்தனர். ஆத்திரமடைந்தவர்கள் போலீசாரை தாக்கினர். கையில் வைத்திருந்த கத்தி , ஆயுதங்களால் குத்தி இருவரையும் கொலை செய்தனர். அருகிலிருந்த நீச்சல் குளம் அருகில் உடல்களை போட்டுவிட்டு காரில் தப்பினர் கொலை செய்தவர்களை கண்டுபிடிக்க ஆதாரம் ஏதும் கிடைக்காமல் தவித்துக்கொண்டிருந்த நேரத்தில் இறந்தவர்களை போஸ்ட் மார்டம் செய்த டாக்டர் ஒரு முக்கிய தகவல் கொடுத்தார். கான்ஸ்டெபிள் ரவிந்தர் கையில் ஒரு வாகன எண் எழுத்தப்பட்டிருப்பதாக சொன்னார். அதை ஹரியானா போலீசார் டிராக் செய்தனர். வாகன உரிமையாளரை விசாரித்த போது அவன் கொலையாளி என தெரிந்தது. மற்றவர்களையும் கண்டுபிடித்து கைது செய்தனர். உயிர் பிரியும் நேரத்திலும் , கொலையாளியை கண்டுபிடிக்க ஆதாரம் விட்டு சென்ற ரவிந்தரை நினைத்து ஹரியானா போலீஸ் பெருமை கொள்கிறது.
Share

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

Advertisement