Advertisement

செய்தி சுருக்கம் | 1 PM BULLETIN | 07-07-2020 | Short News Round Up | Dinamalar

ஊரடங்கு கட்டுப்பாடு விதிகள் தளர்த்தப்பட்டதால் சென்னை நகரில் மக்கள் நடமாட்டமும் வாகன போக்குவரத்தும் பெரிதும் அதிகரித்துள்ளது. இதனால் பஸ், ரயில் ஓட அனுமதிப்பது குறித்து இப்போதைக்கு அரசு முடிவு எடுக்காது என அதிகாரி கூறினார். ஒழுங்காக மாஸ்க் அணியாதவர்களுக்கும் இடைவெளி பின்பற்றாதவர்களுக்கும் 2 ஆண்டு ஜெயில் தண்டனை விதிக்க கேரள அரசு அவசர சட்டம் போட்டுள்ளது. அதுபோல் இங்கும் செய்யுமாறு தமிழக அரசுக்கு கோரிக்கைகள் குவிகின்றன. அமலில் உள்ள 4 க்கு பதிலாக 3 முதன்மை பாடங்களுடன் அறிவிக்கப்பட்ட புதிய பிளஸ் 1, பிளஸ் 2 பாட திட்டத்தை தமிழக அரசு கைவிட்டது. பழைய பாட திட்டமே தொடர ஆணையிட்டுள்ளது.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

Advertisement