Advertisement

மருந்து குழம்பு

செய்முறை : சுக்கு , மிளகு , திப்பிலி , வால் மிளகு , தனியா , சீரகம் , பெருங்காயம் , மிளகாய் ஆகியவற்றை வாணலில் நன்கு வறுத்து பொடியாக அரைத்து கொள்ளவும் .சட்டியில் தேவையான அளவு நல்லெண்ணெய் ஊற்றி கடுகு , கடலைப்பருப்பு , கருவேப்பிலை , வெந்தியம் , பூண்டு போட்டு தாளிக்கவும் . பிறகு புளி கரைத்த தண்ணீரை ஊற்றவும் .தேவையான அளவு தண்ணீர் ஊற்றி மஞ்சள் தூள் , மிளகாய் தூள், தேவையான அளவு உப்பு சேர்த்து கொதிக்க விடவும் . ஒரு கொதி வந்த பின் வறுத்து அரைத்து வைத்த பொடியை சேர்த்து நன்று கலக்கி விடவும். விருப்பம் இருந்தால் ஒரு துண்டு வெல்லம் சேர்த்து கொள்ளலாம் . 20-25 நிமிடம் நன்கு கொதித்த பின் எண்ணெய் பிரிந்து வரும் தருணத்தில் அடுப்பை அணைக்கவும் . ஆரோக்கியமான மருந்து கொழம்பு தயார் .
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

Advertisement