Advertisement

ஆள் மாறாட்டம் என்கிறார் அமைச்சர்

உதயநிதி இ-பாஸ் விவகாரம் ஓய்வதாக தெரியவில்லை. எந்த விதிகளையும் மதிக்காமல், இ-பாஸ் வாங்காமல் சென்னையில் இருந்தது சாத்தான்குளம் சென்ற உதயநிதி மீது சட்டபூர்வ நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் ஜெயகுமார் உறுதியாக தெரிவித்தார். சாத்தான்குளத்தில் மொபைல் கடை வியாபாரியும் அவரது மகனும் போலீசால் அடித்து கொல்லப்பட்டனர். இது நாடெங்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அந்த ஊர் கனிமொழியின் நாடாளுமன்ற தொகுதியான தூத்துக்குடியின் வரம்பில் வருகிறது. தொகுதி பிரதிநிதி என்ற அடிப்படையில் கனிமொழி அங்கு சென்று, அப்பா மகனை இழந்து தவிக்கும் குடும்பத்துக்கு ஆறுதல் கூறினார். அவரது பேட்டி நாடு முழுவதும் ஊடகங்களில் வெளியானது. கனிமொழிக்கு கட்சியில் முக்கியத்துவம் கிடைப்பதை ஸ்டாலின் குடும்பத்தினர் விரும்பவில்லை என நீண்ட காலமாக செய்திகள் வந்த வண்ணம் உள்ளன. அதை ஊர்ஜிதம் செய்வது போல, ஸ்டாலின் மகன் உதயநிதி உடனடியாக சாத்தான்குளம் சென்றார். கனிமொழி செய்தது போலவே ஜெயராஜ் வீட்டுக்கு போய் ஆறுதல் கூறி, வெளியே வந்து பேட்டி கொடுத்தார். சொந்த ஊருக்கு போக இ-பாஸ் கிடைக்காமல் மக்கள் தவிக்கும்போது, சாத்தான்குளத்துக்கு சம்பந்தமே இல்லாத உதயநிதி எப்படி போனார் என கேள்வி எழுந்தது. இ-பாஸ் வாங்கிதான் போனேன் என்கிறார் அவர். அரசு மறுக்கிறது. காருக்கு இ-பாஸ் கேட்கும்போது, அதில் பயணம் செய்யும் அத்தனை பேரின் பெயர், முகவரியை கொடுத்தாக வேண்டும். அதன்படி தேடினால் உதய் பெயரே இல்லை. எனவே அவர் ஆள் மாறாட்டம் செய்து, வேறு நபரின் பெயரில் போயிருக்கலாம் என அதிகாரிகள் கூறினர். பாஸ் வாங்கிதான் போனார் என்றால் அதன் நகலை காட்ட வேண்டியதுதானே? என கேட்கிறார் ஜெயகுமார். முரசொலி நில பத்திரம் போல இதுவும் ஒரு நாடகம் என்கிறார் அவர். விதி மீறலுக்கு உரிய நடவடிக்கை உதயநிதி மீது எடுக்கப்படும் என அமைச்சர் உறுதியாக தெரிவித்தார்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments (7)


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து (7)
venkat
venkat - chennai,இந்தியா . 02-ஜூலை-2020 15:27 IST Report Abuse

திமுக என்றாலே தில்லு முள்ளு கட்சி தானே

Rate this:
Reply

மேலும் 6 கருத்துக்கள்...

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

Advertisement