Advertisement

மற்ற மருந்துகளின் நிலவரம் என்ன ?

கொரோனா வைரஸ் மரபணுக்களின் செயல்பாடுகள் ஜனவரி மாதம் கண்டுபிடிக்கபட்ட பிறகு கொரோனா தடுப்பு மருந்துகள் தயாரிக்கும் பணிகள் தொடங்கப்பட்டது. உலகம் முழுவதும் 190க்கும் அதிகமான கொரோனா தடுப்பு மருந்துகள் குறித்து ஆராய்ச்சிகள் நடைபெற்று வருகிறது. இதில் 15 மருந்துகள் தான் மனிதனிடம் சோதனை நடத்தி வருகிறது . தடுப்பு மருந்துகள் முதலில் எலி, குரங்கு அல்லது மனிதர்கள் போல் மரபணு, குணங்கள் கொண்ட விலங்குகளுக்கு கொடுக்கப்பட்டு ஆய்வு செய்யப்படும். முதல் கட்டமாக 10 மனிதருக்கு செலுத்தி ஆய்வு செய்யப்படும் . இரண்டாம் கட்டத்தில் 100 பேருக்கு தடுப்பு மருந்து கொடுக்கப்படும் . குழந்தைகள், இளைஞர்கள், முதியோர்கள் என அனைத்து வயதினருக்கும் கொடுத்து ஒவ்வொரு உடலிலும் எப்படி மருந்து செயல்படுகிறது என்பதை ஆராய்ச்சி செய்வார்கள். பக்கவிளைவு ஏற்படுத்தாமல் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்தினால் மூன்றாம் கட்ட ஆய்வில் 1000 க்கும் மேற்பட்டோருக்கு கொடுத்து ஆய்வு செய்யப்படும் . வெற்றி பெற்றால் தடுப்பு மருந்தை அந்தந்த நாட்டின் மருந்து ஆராய்ச்சி அமைப்பு, அனைத்து கட்ட ஆராய்ச்சிகளை ஆய்வு செய்து , நோயாளிகளுக்கு செலுத்துவது குறித்து முடிவெடுக்கும். தடுப்பு மருந்துகளில் சில வகை இருக்கிறது . கொரோனா வைரசில் இருந்து எடுக்கப்படும் மரபணுக்கள் வைத்து நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்துபவை , ஜெனிடிக் தடுப்பு மருந்துகள் . வைரசின் மரபணுக்களை, செல்களில் செலுத்தி நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்த செய்வது , வைரஸ் வெக்டார் தடுப்பு மருந்துகள். வைரசின் புரத்தங்களை வைத்து நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்துவத்துவது புரத தடுப்பு மருந்துகள் . வைரசை செயலிழக்க செய்து நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்தும் தடுப்பு மருந்துகளும் உள்ளது. இவற்றின் அடிப்படையில் தான் தடுப்பு மருந்துகள் தயாரிக்கப்படுகின்றன .
Share

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

Advertisement