Advertisement

ஆத்ம நிர்பார் உத்தர பிரதேச ரோஜ்கார் அபியான் திட்டம் மோடி துவக்கிவைத்தார்

இந்தியாவில் புலம்பெயர் தொழிலாளர்கள் பலரும் உத்திரபிரதேச மாநிலத்தை சேர்ந்தவர்கள். ஊரடங்கிற்கு பின் 30 லட்சம் பேர் உத்திரபிரதேசத்துக்கு திரும்பி வந்துள்ளனர். மொத்தமாக அந்த மாநிலத்தில் முழுவதும் தினக்கூலிகள், புலம்பெயர் தொழிலாளர்கள் என 1.25 கோடி வேலை இழந்துள்ளனர். ஊரடங்கு நேரத்தில் மற்ற மாநிலங்கள், உத்திரபிரதேச தொழிலாளர்களுக்கு தகுந்த ஆதரவு கொடுக்கவில்லை என்று அம்மாநில முதல்வர் யோகிக்கு வருத்தம். உத்திரபிரதேச தொழிலாளர்களை பயன்படுத்த விரும்பும் மாநிலங்கள் அரசிடம் முறையாக அனுமதி பெற வேண்டும் என மே25 அறிவித்தார், பின்பு மே 27 இந்த உத்தரவில் இருக்கும் சட்ட ரீதியான பிரச்சனையை கருதி உத்தரவை திருப்பி பெற்றார். ஆனால் இந்த ஊரடங்கு நிகழ்வு 1.25 கோடி தொழிலாளர்களின் வாழ்வாதரத்திற்கு உத்தரவாதம் இல்லை என்பதை அந்த மாநில அரசுக்கு உணர்த்தியுள்ளது. குறைந்த சம்பளம், பணி நிரந்தம் இல்லை என தெரிந்தும் மற்ற மாநிலங்களில் வேலை செய்யும் தொழிலாளர்கள் பொதுவாக அனைத்து சூழ்நிலைகளுக்கு ஏற்றார் போல் தங்களை பொறுத்திகொள்ளும் திறன்படைத்தவர்கள். ஆனால் அவர்களே கண்ணீர் விட்டு, திரும்பவும் சொந்த ஊரை விட்டு வெளியே வரபோவதில்லை என்று மனம் உடைந்து சொன்னதை நம்மால் பார்க்கமுடிந்தது.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

Advertisement