Advertisement

எம்.பி.க்கள் நிதி ஒதுக்க தயக்கம்

பிரதமர் மோடியின் கனவு திட்டங்களில் ஒன்று சன்சாத் ஆதர்ஷ் கிராம யோஜனா. அதாவது முன்மாதிரி கிராம திட்டம். 2014 சுதந்திர தின உரையில் இந்த திட்டத்தை அறிவித்தார் பிரதமர் மோடி. அக்டோபர் 11ல் திட்டம் தொடங்கப்பட்டது. ஒவ்வொரு எம்.பி.,யும் ஒரு கிராமத்தை தத்தெடுத்து, அதை மாதிரி கிராமமாக உருவாக்கும் வகையில், வளர்ச்சி பணிகளை செய்ய வேண்டும். கிராம மக்களின் ஒத்துழைப்புடன், கிராம வளர்ச்சித் திட்டம் எம்.பி., தலைமையில் உருவாக்கப்படும். அதன் பிறகு முழுமையான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டு, மாநில அரசின் துறைகளுக்கு அனுப்பி, மாநில அளவிலான அதிகாரக்குழு, அதை ஆய்வு செய்யும். தேவைப்பட்டால் சில மாற்றங்களை பரிந்துரைக்கும். அதன் பிறகு முக்கியத்துவம் அடிப்படையில் தொகுதி நிதியிலிருந்து ஒதுக்கீடு செய்யப்படும். ஒவ்வொரு எம்.பி.யும் 2019க்குள் 3 கிராமங்களை முன்மாதிரி கிராமமாக உருவாக்கத் திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால், இத்திட்டத்தின் கீழ், அமைச்சர்கள் உள்ளிட்ட எம்.பி.,க்ககள் பலர், எந்தவொரு கிராமத்தையும் தத்தெடுக்கவில்லை. ஒரு சில கிராமங்களை தத்தெடுத்த எம்.பி.,க்களும் தங்கள் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து, போதுமான நிதியை ஒதுக்கீடு செய்யவில்லை. தற்போதுள்ள நிலையில், திட்டம், அதன் நோக்கத்தை முழுமையாக அடையவில்லை. திட்டத்தை மறுபரிசீலனை செய்து, செயல்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும். என திட்டத்தை மதிப்பீடு செய்த, மறு ஆய்வு ஆணையம் தெரிவித்துள்ளது.
Share

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

Advertisement