Advertisement

சாத்தான்குளம் எஸ்.ஐ.க்கள் சஸ்பெண்ட்

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் பகுதியில், மரக்கடை நடத்தி வந்தவர் ஜெயராஜ். இவரோட 31 வயசு மகன் பென்னிக்ஸ் மொபைல்போன் கடை நடத்தி வந்துருக்கார். அந்த பக்கம் 20ந்தேதி ரவுண்ட்ஸ் வந்த போலீசார், கடையை ரொம்ப நேரம் திறந்து வச்சுருக்கறதா, ஜெயராஜை திட்டிருக்காங்க. பதிலுக்கு இவர் திட்ட, வாக்குவாதம் பெரிசாயிருச்சு. இதை பார்த்த ஜெயராஜ் மகன் பென்னிக்ஸ், போலீசார்கிட்ட சமாதானம் பேசிருக்கார். கடைசில, கைகலப்பா மாறிருச்சு. ரெண்டு பேரையும் அரெஸ்ட் பண்ணி, 21ந்தேதி அதிகாலையில் கோவில்பட்டி கிளை சிறையில் அடைச்சுருக்காங்க. மயங்கி விழுந்த பென்னிக்ைஸ, சிறைக்கு பின்னாலிருந்த கவர்மென்ட் ஆஸ்பிடல்ல சேர்த்திருக்காங்க. நேத்து அவர் இறந்துட்டார். ஜெயராஜ்க்கும் உடல்நலம் சரியில்லாம, அவரை, கோவில்பட்டி ஜி.எச்.ல சேர்த்தப்போ, அவர் இன்னைக்கு இறந்துட்டார். போலீஸ் கஸ்டடியில் தந்தை, மகனை அடிச்சதால தான் ரெண்டு பேரும் இறந்துட்டாங்கனு, உறவினர்கள் சடலங்களை வாங்க மறுத்து மறியல செஞ்சாங்க. சாத்தான்குளம் போலீசார் இதுக்கு காரணம்னு போராட்டத்தில் ஈடுபட்டனர். வியாபாரிகள் கடைகளை அடைச்சு ஆதரவு தெரிவிச்சுருக்காங்க. போலீஸ் பேச்சுவார்த்தை நடத்திருக்கு. பிரச்னையோட தீவிரத்தை குறைக்குறதுக்காக, சாத்தான்குளம் எஸ்.ஐ.க்கள் ரகு கணேஷ், பாலகிருஷ்ணன் ரெண்டு பேரையும் சஸ்பெண்ட் செஞ்சு எஸ்.பி அருண்பாலகோபாலன் உத்தரவிட்டார். ஸ்டேஷனில் இருந்த இன்ஸ்பெக்டர் ஸ்ரீநாத் உட்பட ஐந்து போலீசாரும் டிரான்ஸ்பர் செய்யப்பட்டனர். கோவில்பட்டி JM1 மாஜிஸ்ட்ரேட் பாரதிதாசன் திருநெல்வேலி அரசு மருத்துவமனை பிரேத பரிசோதனை மையத்தில் இரண்டு உடல்களையும் ஆய்வு நடத்தி வருகிறார்.
Share

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

Advertisement