Advertisement

வீட்டிலிருக்கும் உணர்வை தரும் சிகிச்சை மையம்

சென்னை புளியந்தோப்பு கேபி பார்க் பகுதியில் புதிதாக கட்டுப்பட்டுள்ள தமிழ்நாடு குடிசை மாற்று வாரியத்தின் அடுக்குமாடி குடியிருப்புகளின் 4 பிளாக்குகள் கொரோனா வார்டாக மாற்றப்பட்டுள்ளது. 864 வீடுகள் இதற்காக ஒதுக்கப்பட்டுள்ளன . ஓவ்வொரு வீட்டிலும் இரண்டு படுக்கைகள் வீதம் 1728 பேருக்கு சிகிச்சையளிக்கப்படும் . ஸ்டான்லி மருத்துவமனை, அயனாவரம் இஎஸ்ஐ மருத்துவமனைகளில் குறைவான பாதிப்புடன் இருக்கும் 831 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். அட்மிட் ஆகும் ஒவ்வொருவருக்கும் சோப்பு , சீப்பு, பிரஷ் ,வழங்கப்படுகிறது. காலை டிபன் இட்லி ,ரவா கிச்சடி மதிய உணவு சாம்பார் ,மிளகு ரசம் ,தயிர், பொறியல், இரவு கிச்சிடி சப்பாத்தி தரப்படுகிறது. நோயாளிகளின் மன அழுத்ததை குறைக்க அனைத்து ரூமிலும் டிவி , தினமும் மாலை பாடல் கேட்பதற்கு ஒவ்வொரு தளத்திலும் பொது ஸ்பீக்கர் பொருத்தப்படுள்ளது. கரன்ட் கட் ஆனாலும் கவலைபட வேண்டாம். ஜெனரேட்டரும் தயாராக உள்ளது. ஒவ்வொரு தளத்திலும் சிசிடிவி கேமரா பொருத்தப்பட்டுள்ளது. குடியிருப்புக்கு கீழே போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சிசிடிவி காட்சிகளை மானிட்டர் வழியே பார்த்து நோயாளிகளை கண்காணிக்கின்றனர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

Advertisement