Advertisement

தூத்துக்குடியில் பெயர் குழப்பத்தால் கொரோனா பீதி

தூத்துக்குடி டூவிபுரம் 4வது தெருவை சேர்ந்த ஒருத்தர், கடந்த 19 ம் தேதி, கவர்மென்ட் ஆஸ்பிடல்ல கொரோனா சிகிச்சைக்காக, சேர்க்கப்பட்டார். அதேபெயரில், இரண்டாம் தேதி ஏற்கனவே ஒருவர், சிகிச்சையில் இருக்கிறார். 20 நாட்கள் சிகிச்சைக்கு பின், அவரை டிஸ்சார்ஜ் செய்யணும். ஆனா, நாலு நாள் சிகிச்சை பெற்ற அதே பெயர் கொண்ட நபரை, டிஸ்சார்ஜ் செஞ்சுட்டாங்க. ட்ரீட்மென்ட் முடியலைனு அந்த நபருக்கு தெரியும். இருந்தாலும் சத்தம் காட்டாம, சந்தோஷமாக ஆஸ்பிடலை விட்டு வெளிய போய்ட்டார். டிஸ்சார்ஜ் கொடுத்த பின்னும், இவர் ஏன் இங்கிருக்கிறார் என, நர்ஸ் விசாரிக்க, இன்னும் டிஸ்சார்ஜ் சீட் தரலைனு அந்த நபர் சொல்ல, அப்போ தான், சிகிச்சையில் இருக்கிற நோயாளிய அனுப்பிய விஷயம் தெரிஞ்சுது. இவர் மூலமா, இன்னும் நிறைய பேருக்கு கொரோனா பரவிரும்னு பதறிப்போன ஆஸ்பிடல், சுகாதாரத்துறைக்கு தகவல் தெரிவிச்சுருக்கு. அதிகாரிகள் உடனடியா அவர் வீட்டுக்கு போனா… பார்ட்டி அங்க இல்லை. டீம் மொத்தமும் ஷாக். அப்புறம் அங்க இங்க னு அவரை தேடி அலைஞ்சாங்க. வீட்டுக்கு கொஞ்ச துாரத்துல இருக்குற ரோட்ல, ஹாயா நின்னு வேடிக்கை பார்த்துட்டிருந்தவரை, கண்டுபிடிச்சுட்டாங்க. எதுவுமே நடக்காத மாதிரி, அந்த நபரும் சமர்த்தா, வண்டியில ஏறி உட்கார்ந்து ஆஸ்பிடலுக்கு வந்துட்டார். காணாம போன கொஞ்ச நேரத்துல, யார் யார்கிட்ட அவர் பேசினார், பழகினார்னு சுகாதாரத்துறையினர் விசாரிச்சுட்டிருக்காங்க. ஊரே கொரோனா பீதில இருக்கறப்போ, இன்னும் கவனம் எடுத்துக்க கூடாதா னு, ஆஸ்பிடல் மேல, மக்களுக்கு கொஞ்சம் வருத்தம் தான்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

Advertisement