Advertisement

சீனாவுக்கு மோடி எச்சரிக்கை

லடாக் எல்லை பிரச்னை பற்றி அனைத்துக் கட்சித் தலைவர்களுடன் பிரதமர் மோடி வீடியோ கான்பரன்சிங் மூலம் விவாதித்தார். கூட்டத்தில் அவர் பேசியதாவது: சீன ராணுவத்தின் செய்கை பாரத தேசத்தை கொந்தளிக்க வைத்துள்ளது; நமது நாட்டின் எல்லைக்குள் சீன ராணுவம் ஊடுருவவில்லை. முகாம் எதையும் அவர்கள் கைப்பற்றவும் இல்லை. லடாக்கில் நடந்த சண்டையில் துணிச்சல்மிக்க நமது வீரர்கள் 20 பேர் உயிர்த்தியாகம் செய்துள்ளனர்; இந்திய எல்லையை அபகரிக்க நினைத்த சீன ராணுவத்தினருக்கு சரியான பாடத்தை வீரர்கள் புகட்டியுள்ளனர். நமது எல்லையில் ஒரு அங்குலம் இடத்தைக்கூட அபகரிக்க யாராலும் முடியாது; அப்படி நினைக்கும் எதிரிகளை அடக்கும் ஆற்றல் நம்மிடம் இருக்கிறது என்று பிரதமர் கூறினார்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

Advertisement