Advertisement

குஜராத்தின் வதோதரா ஸ்டேஷனில் துவக்கம்

இனி ரயில்களும் ஆட்டோமேடிக் பிளான்ட் மூலம் சுத்தப்படுத்தப்படும். குஜராத் மாநிலம் வதோதரா ஸ்டேஷனில் ஆட்டோமேடிக் கோச் வாஷிங் பிளான்ட் அமைக்கப்பட்டுள்ளது. சென்சார் மூலம், இந்த கோச் வழியாக ரயில்கள் வரும் நேரத்தில் சுத்தம் செய்யப்படுகிறது. பிளாட்பாரத்தில் மணிக்கு 3 முதல் 5 கிலோமீட்டர் வேகத்தில் மெல்ல ஊர்ந்து செல்லும் போது, தண்ணீர் பீய்ச்சி அடிக்கப்பட்டு சோப் ஆயில், பவுடர் மூலம் பிரஷ் கொண்டு டிரெயின் வெளிப்புறம் சுத்தம் செய்யப்படுகிறது. காற்றின் மூலம் டிரை ஆகிறது. மனிதர்கள் சுத்தம் செய்வதுடன் ஒப்பிடும் போது, பல வழிகளில் பிளஸ் பாயின்டாக உள்ளது. முதல் பாயின்ட், ஒரு டிரெயினை சுத்தம் செய்ய 24 பேர் தேவை. அப்போது ஆயிரத்து 200 லிட்டர் தண்ணீர் வீணாகும். ஒவ்வொரு கோச் ஆக நடந்து சென்று சுத்தம் செய்வதால், பல மணி நேரம் செலவாகும். ஆட்டோமேடிக் சென்சார் முறையில் ஒரு டிரெயினை சுத்தம் செய்ய 8 முதல் 10 நிமிடங்களே ஆகிறது. 250 லிட்டர் தண்ணீர் போதும். தண்ணீர் அனைத்தும் சேகரிக்கப்படுகிறது. இதில், 80 சதவீத தண்ணீர், ரிவர்ஸ் ஆஸ்மோசிஸ் முறையில் மறுசுழற்சியில் சுத்தம் செய்யப்பட்டு, மீண்டும் பயன்படுத்தப்படுகிறது. என்விரான்ட்மென்ட் பிரெண்ட்லி வேறு. இதுகுறித்து ஓரியண்டல் சி.ஜி.எம் சிராக் பட்டேல் கூறுகையில், இந்த மெஷின் முழுக்க உள்நாட்டு தயாரிப்பு. டைமிங், மேன் பவர், வாட்டர் எல்லாமே மிச்சப்படுத்தப்படுகிறது. விரைவில் இந்த பிளான்ட் செயல்பாட்டுக்கு வரும் என்றார்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

Advertisement