Advertisement

சிகிச்சை செலவு 3000 ரூபாய் தான்

1960 ல் இருந்து ஆஸ்துமா, தோல் நோய்களுக்கு டெக்சாமெத்தசோன் என்ற மருந்தை டாக்டர்கள் கொடுத்து வருகின்றனர். இதை கொரோனா நோயாளிகளுக்கு கொடுத்தால் பலன் கிடைக்கும் என ஒரு ஆராய்ச்சியில் தெரிந்தது. இங்கிலாந்து டாக்டர்கள் 2,000 நோயாளிகளுக்கு கொடுத்தனர். வென்டிலேட்டரில் இருந்தவர்களில் 35 சதவீதம், ஆக்சிஜன் தெரபியில் இருந்தவர்களில் 20 சதவீதம் பேர் 28 நாட்களில் முழுமையாக குணம் அடைந்தனர். குறைந்த டோஸ் கொடுத்தாலே நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து வைரசை வெல்ல உதவி செய்கிறது. ஆனால், லேசான பாதிப்பு உள்ளவர்களுக்கு இதை கொடுக்க வேண்டாம் என டாக்டர்கள் தெரிவித்தனர். இந்த சிகிச்சைக்கு மூவாயிரம் ரூபாய் தான் செலவாகிறது. முன்பே இதை கொடுத்திருந்தால் 5,000 உயிர்களை காப்பாற்றி இருக்கலாம் என்றார் பிரதமர் போரிஸ் ஜான்சன்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

Advertisement