Advertisement

பாசிடிவ் வந்தால் பயத்தில் ஓட்டம்

கொரோனா அறிகுறி இருப்பதாக சந்தேகம் வந்தால் டெஸ்ட் எடுப்பது நடைமுறை. சென்னையில் அப்படி செல்பவர்கள், ஆய்வகத்தில் சாம்பில் கொடுத்து விட்டு போவார்கள். ஃபோனில் ரிசல்ட் வரும் வரை வீட்டில் தனிமையில் இருக்க வேண்டும். ரிசல்ட் பாசிடிவ் என வந்தால் ஆஸ்பத்திரிக்கு கூட்டிச் செல்ல ஆம்புலன்ஸ் வரும். மே 23 முதல் ஜூன் 11 வரை டெஸ்ட் எடுத்தவர்களில், பாசிடிவ் ரிசல்ட் வந்த 270 பேரை கண்டுபிடிக்க முடியவில்லை. போனை ஆஃப் செய்துள்ளனர். இரண்டு வாரம் தனி இடத்தில் அடைத்து விடுவார்கள் என்ற பயத்தில் தொடர்பு எல்லைக்கு அப்பால் போய்விட்டனர். இவர்கள் வெளியில் சுற்றினால் பலருக்கு தொற்று ஏற்படும் என்பதால் கண்டுபிடித்து தருமாறு போலீஸ் கமிஷனரிடம் மாநகராட்சி கேட்டது. ரிசல்ட் நெகடிவ் என வந்தாலும் கோரன்டைன் செய்வோம் என மாநகராட்சி கமிஷனர் சொன்னதுதான் மக்கள் பீதிக்கு காரணம் என அதிகாரிகள் சுட்டிக் காட்டினர். பாதி பேருக்கு மேல் கண்டுபிடித்து விட்டோம். அவர்களில் யாருக்கும் இப்போது அறிகுறிகள் இல்லை. மீதி பேரையும் கண்டுபிடித்து விடுவோம் என போலீசார் தெரிவித்தனர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

Advertisement