Advertisement

உண்மை பரிசோதனையின் முடிவுகள்

சென்னையில் கொரோனா நோயாளிகளை அட்மிட் செய்ய எந்த ஆஸ்பத்திரியிலும் ஒரு படுக்கை கூட இல்லை என்ற தகவலை தமிழக அரசு மறுக்கிறது. அரசு, தனியார் மருத்துவமனைகள், கோவிட் ஹெல்த் சென்டர்கள், கோவிட் கேர் சென்டர்கள் ஆகிய அனைத்திலுமாக மொத்தம் 17,433 படுக்கைகள் இந்த நோயாளிகளுக்காக ரெடியாக இருக்கின்றன என்று அரசு சொல்கிறது. எந்த எந்த மருத்துவமனைகளில் எத்தனை படுக்கைகள் உள்ளன, அங்கு அட்மிட் ஆக யாரை தொடர்பு கொள்ள வேண்டும் என்று பெயர் மொபைல் நம்பர் ஆகியவற்றையும் அமைச்சர் விஜய பாஸ்கர் வெளியிட்டார். அந்த லிஸ்டை பார்த்தால், இன்னும் 6,000 படுக்கைகள் காலியாக இருப்பதாக தெரிகிறது. எப்படி என்றால், சென்னையில் இதுவரை 23,298 பேருக்கு வைரஸ் உறுதி செய்யப்பட்டது. அதில் 11,817 பேர் அட்மிட் ஆகி சிகிச்சை பெறுகின்றனர். அதை கழித்தால் இன்னும் 5,616 பேரை அட்மிட் செய்ய முடியும்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

Advertisement