Advertisement

ஓட்டல்களில் அமர்ந்து சாப்பிடலாம் வாங்க

ஓட்டல்களில் நேற்று வரை பார்சல்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்ட நிலையில், இன்று முதல் வாடிக்கையாளர்கள் அமர்ந்து சாப்பிட அரசு அனுமதி வழங்கியது. ஓட்டலில் நு-ழைந்ததுமே காய்ச்சல் சளி இருக்கிறதா என, ஓட்டல் ஊழியர்கள் வாடிக்கையாளர்களை பரிசோதிக்கின்றனர். பெயர், மொபைல் எண் பதிவு செயயப்படுகிறது. அதன்பிறகே, சாப்பிட என்ன வேண்டும் என்பதை ஓட்டல் ஊழியர்கள் கேட்கின்றனர். தற்போது 50 சதவீத இருக்கைகளில் மட்டும் வாடிக்கையாளர்கள் அமர்ந்து சாப்பிட அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஆனாலும் கூட்டம் குறைவாகவே இருந்தது. சென்னை மற்றும் சுற்றுப்புறங்களில் கொரோனா தீவிரமாக பரவி வருவதால் பெரும்பாலான ஓட்டல்களை திறக்க உரிமையாளர்கள் பயந்தனர். பெரிய ஓட்டல்கள் மட்டுமே திறந்திருந்தன. அதிலும் குறைந்த எண்ணிக்கையிலேயே மக்கள் சாப்பிட வந்தனர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

Advertisement