Advertisement

பழத்தில் வெடிவைத்த கொடூரனை தேடும் கேரள போலீஸ்

கேரளா மாநிலம் பாலக்காட்டில் உள்ள சைலண்ட் பள்ளத்தாக்கு பகுதியில், கர்ப்பிணி யானை உணவு தேடி அலைந்தது. யாரோ கொடுத்த அன்னாசிபழங்களை ஆசையாய் வாயில் வைத்து சுவைத்தது. அடுத்த நொடி அன்னாசிபழத்திற்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த வெடி வெடித்தது. யானையின் மேல்தாடை உடைந்தது. பற்கள் கொட்டி ரத்தம் பீறிட்டது. வலியால் துடித்தபடி, அந்த யானை நகர்ந்தது. தாடை சேதமடைந்ததால், பசித்த வயிற்றுக்கு உணவும் சாப்பிட முடியவில்லை. சோர்ந்து போய் வெள்ளியாற்றில் நின்றது. வனத்துறையினர் அந்த யானையை காப்பாற்ற, மற்ற இரண்டு யானைகள் மூலம் முயற்சித்தனர். ஆனால், நின்ற நிலையில் யானை இறந்து விட்டது. பிரேத பரிசோதனையில் அதன் வயிற்றுக்குள் சில மாதங்களே ஆன கரு இறந்து கிடந்ததது. மனிதாபிமானத்தை கேள்விக்குறியாக்கிய இந்த சம்பவம், பார்ப்போரை உலுக்கியது. கேரள முதல்வர் பினராயி விஜயனும் கொதித்து போனார். யானை கொல்லப்பட்ட இடம் மன்னார்காடு வனச்சரகம். அங்கு போலீசாரும், கோழிக்கோடு வனவிலங்கு குற்றத்தடுப்பு பிரிவினர் விசாரணை நடத்தவும் உத்தரவிட்டார். மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சகமும் கேரள அரசிடம் விளக்கம் கேட்டுள்ளது. இதுகுறித்து மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் கூறுகையில், உணவு என்ற பெயரில் வெடி வைத்து யானையை கொலை செய்த சம்பவம் கொடூரமானது. கொலையாளி மீது கடுமையான நடவடிக்கை தேவை. அது தொடர்பான அறிக்கையை கேரள அரசிடம் இருந்து கேட்டுள்ளேன் என்றார்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

Advertisement