Advertisement

வெள்ளை மாளிகையில் நடந்தது என்ன?

நீக்ரோ எனப்படும் கறுப்பு இனத்தை சேர்ந்த ஒருவரை வெள்ளையர் எனப்படும் இனத்தை சேர்ந்த போலீஸ் அதிகாரி கழுத்தை அமுக்கி கொன்றார். இதை கண்டித்து அமெரிக்காவில் போராட்டம் வெடித்தது. அது வன்முறையாக மாறியது. சூறையாடல், தீவைப்பு எல்லாம் நடந்தன. கலவர காரர்களை அதிபர் ட்ரம்ப் கடுமையாக எச்சரித்தார். அவர்கள் எல்லை மீறினால் நாய்களையும் துப்பாக்கி குண்டுகளையும் சந்திக்க நேரும் என்றார். மக்களின் குமுறலை புரிந்து கொள்ளாமல் மட்டம் தட்டுகிறாரே? என்று கோபம் அதிகமானது. வாஷிங்டன் நகரில் உள்ள அதிபரின் இல்லமான வெள்ளை மாளிகையை முற்றுகை இட்டனர். அரசு எதிர்பாராத பெரிய கூட்டம் என்பதால், அதிரடி படையால் விரட்டி அடிக்க முடியவில்லை. பெரும் பரபரப்பு ஏற்பட்டது. அணுகுண்டு தாக்குதல் போன்ற பயங்கர நெருக்கடி ஏற்படும்போது, அதிபரை காப்பாற்றுவதற்காக வெள்ளை மாளிகையில் பூமிக்கு கீழே பெரும் ஆழத்தில் பாதுகாப்பு அறை கட்டப்பட்டுள்ளது. அந்த அறைக்கு ட்ரம்பை அவசரமாக அழைத்து சென்றனர் அதிபரின் சிறப்பு பாதுகாப்பு படை வீரர்கள். போராட்ட கும்பலை கலைத்த பின் ஒரு மணி நேரம் கடந்த பிறகு ட்ரம்ப்பை மேலே அழைத்து வந்தனர் என்று நியுயார்க் டைம்ஸ் நாளிதழ் தெரிவித்தது. இதற்கு முன், 2001 ஆம் அண்டு ஒசாமா பின் லேடனின் அல் கய்தா பயங்கரவாதிகள் விமானங்களை கடத்தி அமெரிக்காவை தாக்கிய போது, அன்றைய அதிபர் ஜார்ஜ் புஷ் இதே அறைக்கு கொண்டு செல்லப்பட்டார். தொடரும் வன்முறையால் 40 நகரங்களில் ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. அநேக நகரங்களில் கொரோனா ஊரடங்கும் இன்னும் அமலில் இருக்கிறது.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

Advertisement