Advertisement

பல நகரங்களில் மீண்டும் ஊரடங்கு

அமெரிக்காவின் மின்னபொலிஸ் நகரில் ஜார்ஜ் என்ற கறுப்பின இளைஞரை போலீஸ் அதிகாரி தரையில் தள்ளி காலால் கழுத்தை நசுக்கியதில் அவர் இறந்தார். வெள்ளை இன போலீஸ் அதிகாரி டெரிக் Derek உடனடியாக கைது செய்யப்பட்டதோடு கொலை வழக்கும் போடப்பட்டது. ஆனாலும் ட்ரம்ப் அரசு இன துவேஷத்தை தூண்டுவதாக சொல்லி வாஷிங்டன், நியூயார்க், லாஸ் ஏஞ்சல்ஸ், சிகாகோ என பல நகரங்களில் ஆயிரக்கணக்கானவர்கள் ஒன்றுதிரண்டு தீவைப்பு போன்ற வன்முறை போராட்டங்களில் ஈடுபட்டுள்ளனர். கடந்த பல ஆண்டுகளில் அமெரிக்கா இப்படியொரு போராட்டத்தை சந்தித்தில்லை எனுமளவுக்கு திரும்பும் இடமெல்லாம் போராட்டக்காரர்கள் மீது போலீசார் கண்ணீர் புகைக்குண்டுகளை வீசி விரட்டுகின்றனர். வீட்டை விட்டு வெளியே வரக்கூடாது என போலீஸ் எச்சரித்தாலும் ஐந்தாவது நாளாக வன்முறை போராட்டம் தொடர்கிறது.
Share

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

Advertisement