Advertisement

ஆட்சிக்கு வந்து ஓராண்டு முடிந்தது

இரண்டாம் முறை ஆட்சியை பிடித்து ஓராண்டு பூர்த்தி ஆனதை கொண்டாட முடியாத சூழ்நிலையால், கடிதம் வழியாக மக்களுடன் பேசி இருக்கிறார் பிரதமர் மோடி. ”இந்தியாவை புதிய உச்சத்துக்கு கொண்டு செல்வேன் என்ற கனவுடன் தான் எனக்கு மாபெரும் வெற்றியை அளித்தீர்கள். கடந்த ஐந்தாண்டுகளில் ஏழைகளின் வாழ்வு மேம்பட்டது. உலக அரங்கில் இந்தியாவின் மதிப்பு உயர்ந்தது; ஜம்மு காஷ்மீரில் மக்களிடம் ஒற்றுமை அதிகரித்தது. பல ஆயிரம் புலம்பெயர் தொழிலாளர்கள் வேலை இழந்து விரக்திக்குள்ளாகி நடந்தும் சைக்கிளிலும் லாரிகளிலும் ஊர் திரும்பும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். அனைத்து தரப்பினரும் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆனால், ஊரடங்கு விதிகளுக்கு கட்டுப்பட்டு கொரோனாவை நாம் ஒற்றுமையாக எதிர்கொண்டதை பார்த்து உலகமே வியக்கிறது. இனியும் அதை நாம் தொடர்ந்தாக வேண்டும். கொரோனாவை ஒன்றுபட்டு எதிர்கொண்டதை போல, நாட்டின் பொருளாதாரத்தை மீட்கவும் நம்மால் முடியும். மற்ற நாடுகளுக்கு முன்னுதாரணமாக இருக்கலாம் என்று மோடி எழுதியுள்ளார்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

Advertisement