Advertisement

அரசுக்கு ஐகோர்ட் அட்டகாச யோசனை

ஜெயலலிதாவின் வேதா நிலையம் இல்லத்தை முதல்வரின் அதிகாரப்பூர்வ அலுவலக இல்லமாக மாற்ற வேண்டும்; தேவைப்பட்டால் ஒரு பகுதியில் நினைவில்லம் அமைக்கலாம்; வேதா நிலையத்தை முழுவதுமாக நினைவில்லமாக்கும் முடிவை அரசு மறு பரிசீலனை செய்ய வேண்டும் என நீதிபதிகள் தீர்ப்பளித்தனர். ஜெயலலிதாவின் சகோதரர் பிள்ளைகள் என்பதால் அவரது சொத்துகள் மீது தீபா, தீபக்குக்கு உரிமை உண்டு. அவர்களை இரண்டாம் நிலை வாரிசுகளாக அறிவிக்கிறோம்; ஜெவின் எஸ்டேட் மற்றும் நிறுவனங்களை நிர்வகிக்கும் உரிமை இவர்களுக்கு இருக்கிறது. தீபா, தீபக்குக்கு சில சொத்துக்களை கொடுத்து விட்டு, எஞ்சிய சொத்துக்களை சமூக சேவைக்காக பயன்படுத்தும் வகையில் ஜெ பெயரில் அறக்கட்டளை உருவாக்கவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர். இது குறித்து 8 வாரங்களில் தமிழக அரசு மனு தாக்கல் செய்யவும் உத்தரவிட்டனர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

Advertisement