Advertisement

சொட்டு நீர் பாசனத்தால் 2 மடங்கு லாபம்

சீர்காழியை அருகே கரைமேடு கிராமத்தை சேர்ந்தவர் குலசேகரன். 30 ஆண்டுகளாக நிலத்தடி நீரை மட்டுமே நம்பி தர்பூசணி சாகுபடி செய்துவந்தார். நீரை சேமிப்பதற்காக , விதைகள் நடவுக்கு பின் அறுவடை வரை தினமும் ஆட்களை கொண்டு குடங்கள் மூலம் தண்ணீர் ஊற்றினார். மாற்று வழிதேடி சீர்காழி தோட்டக்கலை அலுவலகத்தை நாடியபோது, மானியத்துடன் கிடைக்கும் சொட்டு நீர் பாசன அமைப்பு குறித்தும் குறைந்த நீரில் அதிக மகசூல் பெறுவது குறித்தும் அதிகாரிகள் விளக்கினர். தனது நிலத்தில் சொட்டுநீர் பாசன அமைப்பை நிறுவினார். மூன்று மாத கால பயிரான தர்பூசணியை 65 நாட்களிலேயே அறுவடை செய்தார். இதுவரை ஏக்கருக்கு 6 டன் மட்டுமே கிடைத்த நிலையில் இந்தாண்டு 12 டன் மகசூல் கிடைத்துள்ளது. ஒரு பழம் 15 கிலோ வரை எடை நிற்பதால் அதிக லாபம் கிடைக்கிறது என தெரிவிக்கும் விவசாயி குலசேகரன் மற்ற விவசாயிகளும் சொட்டுநீர் பாசன முறையை பயன்படுத்தி பயன்பெற வேண்டும் என்கிறார்..
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

Advertisement