LOGIN
dinamalar telegram
Advertisement

தனியார் மருத்துவமனைகள் திண்டாட்டம்

கொல்கத்தாவில் தனியார் மருத்துவமனைகளில் பணியாற்றி வந்த மணிப்பூரை சேர்ந்த 185 நர்ஸ்கள் சமீபத்தில் வேலையை விட்டுவிட்டு ஊருக்கு சென்றனர். அவர்கள் அனைவரும் தலைநகர் இம்பாலில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். இதுவரை, கொல்கத்தா மருத்துவமனைகளில் இருந்து 500 நர்ஸ்கள் வேலையை விட்டுள்ளனர். அதில் 300 பேர் மணிப்பூரை சேர்ந்தவர்கள். கொரோனா வார்டில் பணியாற்றுபவர்களுக்கு போதிய பாதுகாப்பு கவச உடை உள்ளிட்ட அத்தியாவசய பொருட்களை கூட வழங்கப்படவில்லை என கூறப்படுகிறது. பணியில் இருந்தபோது இன வேற்றுமை, பாகுபாடு பிரச்னைகளை எதிர்கொள்ள நேர்ந்ததாகவும், நர்கள் தெரிவிக்கின்றனர். கொரோனா நோயாளிகளுடன் இருப்பதால், சமூக புறக்கணிப்பு மற்றும் குறைந்த அல்லது சம்பளம் இல்லாமை, வீட்டு தனிமைப்படுத்தலின் போது உணவு பற்றாக்குறை, பணிச்சுமை, மனச்சோர்வு, உள்ளிட்ட பல காரணங்களால் நர்கள் வேலையை விட்டு ஊர் திரும்புதாக சொல்லப்படுகிறது.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement