dinamalar telegram
Advertisement

அதிகாரிகளுக்கு அமித்ஷா உத்தரவு

அரசு அலுவலகங்கள், அலுவலக வளாகம், ஆஸ்பத்திரி பஸ் நிலையம் போன்ற பொது இடங்களில் எச்சில் துப்பினால் தண்டனை விதிக்கப்படும் என மத்திய அரசு உத்தரவு பிறப்பித்தது. என்றாலும், இந்த விதி முழுமையாக பின்பற்றப்படவில்லை. போலீஸ் கெடுபிடி இல்லை என்பதால் துப்பும் பழக்கத்தை யாரும் நிறுத்தவில்லை. தும்மல் இருமல் மூலமாக வைரஸ் பரவுவதை தடுக்க மாஸ்க் அணியுங்கள் என்று வலியுறுத்தும் அதிகாரிகள், அதை விட மோசமான துப்பும் பழக்கத்தை ஒழிக்க ஆர்வம் காட்டவில்லை என்று உள்துறைக்கு புகார்கள் வந்தன. வட மாநிலங்களில் உயர் பதவி வகிக்கும் அதிகாரிகள் பலரும் மெல்லும் புகையிலைக்கு அடிமையாகி இருப்பதால், அலுவலக வளாகத்தில் அவர்களும் துப்புவதை பார்க்கலாம். இதனால் கீழே உள்ள ஊழியர்களை கட்டுப்படுத்த அவர்களால் முடியவில்லை. இனிமேல் ஒவ்வொரு துறை அதிகாரியும் இந்த விஷயத்தில் கறாராக இருக்க வேண்டும் என உள்துறை அமைச்சர் அமித்ஷா எச்சரிக்கை செய்துள்ளார்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement