dinamalar telegram
Advertisement

மதுரையை துவம்சம் செய்யும் கொரோனா

மதுரை தோப்பூரில் 224.24 ஏக்கரில் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு 2019 ஜனவரி 27 ல் அடிக்கல் நாட்டப்பட்டது. ரூ.1,264 கோடி கடனாக தர ஜப்பான் முனையமான 'ஜிக்கா' முன்வந்தது. இதற்காக பிப்ரவரி மாதம் ஜப்பான் குழு வந்தது. மார்ச் வரை ஆய்வு செய்ய இருந்தனர். அதன் பிறகு திட்ட மதிப்பீடு தயாரிக்க இருந்தனர். கொரோனாவால் அவர்கள் வந்த வேகத்தில் நாடு திரும்பினர். தமிழக அரசு ஏற்கனவே முதல்நிலை திட்ட அறிக்கை தயாரித்துள்ளது. அதை சரி பார்க்கவே ஜிக்கா குழு வந்தது. கட்டுமான விவரம், கடன் அளவு, வட்டி விகிதம் பற்றி அதன் பிறகு தீர்மானிக்க இருந்தனர். செப்டம்பரில் ஜப்பானும் இந்தியாவும் ஒப்பந்தம் கையெழுத்திட்டு சர்வதேச டெண்டர் விடலாம் என எதிர்பார்க்கப்பட்டது. கொரோனாவால் இந்த வேலைகள் எல்லாம் அடுத்த ஆண்டு மே வரை தள்ளிப்போகலாம். மருத்துவமனை அமையும் சுற்றுச்சுவர் கட்ட நிதி ஒதுக்கப்பட்டது. ரெடிமேட் சுவர்கள் அமைக்க தொடங்கினர். 50 நாட்களாக அந்த வேலையும் நடக்கவில்லை. ஊரடங்கு தளர்வால் இப்போது அந்த வேலை மீண்டும் தொடங்கியது.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement