Advertisement

பெண் நிருபர் மீது பாய்ந்த அதிபர் ட்ரம்ப்

அமெரிக்க அதிபர் டிரம்ப் வெள்ளை மாளிகையில் பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது, பெண் நிருபர் ஒருவர், அமெரிக்காவில் 80,000க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்துவிட்ட நிலையிலும், கொரோனா வைரஸ் பரிசோதனை செய்வதை ஏன் உலகளாவிய போட்டியாக பார்க்கிறீர்கள் எனக்கேட்டார். இதற்கு பதிலளித்த டிரம்ப், உலகில் எல்லா இடங்களிலும் மக்கள் உயிரிழந்து வருகிறார்கள். இந்த கேள்வியை நீங்கள் சீனாவிடம்தான் கேட்கவேண்டும்; என்னிடம் கேட்க வேண்டாம். இக்கேள்வியை சீனாவிடம் கேட்கும்போது, மிகவும் அசாதாரணமாக பதில் உங்களுக்கு கிடைக்கலாம் என்றார். இதை எதற்கு என்னிடம் சொல்கிறீர்கள் என அந்த பெண் நிருபர் கேட்க, இப்படி மோசமான கேள்வி கேட்கும் எவருக்கும் அப்படித்தான் சொல்வேன் என காட்டமாக கூறிவிட்டு சென்றுவிட்டார்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

Advertisement