Advertisement

அமமுக நிர்வாகி கைது!

புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை பகுதி மக்களுக்கு, அமைச்சர் விஜயபாஸ்கர், தனது செலவில் அரிசி உள்ளிட்ட நிவாரண உதவிகளை வழங்கினார். அரிசி பையில், விஜயபாஸ்கரின் படம் இடம் பெற்றிருந்தது. விஜயபாஸ்கரின் படத்திற்கு மேலாக, நாளைய முதலமைச்சரே என்று, விழுப்புரத்தை சேர்ந்த அமமுக நிர்வாகி முத்துக்குமார் கிராபிக்ஸ் செய்து, வலைதளங்களில் வெளியிட்டார். புதுக்கோட்டை நகர காவல்நிலையத்தில் அதிமுக குணசீலன் புகார் அளித்தார். முத்துக்குமாரை போலீசார் கைது செய்தனர். பொய்யாக புனைதல், ஆவணங்களை திருத்துதல், ஏமாற்று வேலை செய்தல், அவதூறு பரப்புதல், சமூக வலை தளங்களில் பரப்புதல் பிரிவுகளின் கீழ் வழக்கு பதிந்தனர்.
Share

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

Advertisement