Advertisement

15 பேரின் கொரோனாவை வீழ்த்தியது

தமிழகத்தில் கொரோனாவுக்கு 4000 த்திற்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்றுவருகின்றனர். பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் அலோபதி சிகிச்சையுடன், பாரம்பரிய சித்த மருத்துவத்தையும் சேர்த்து சிகிச்சை அளிக்க நிபுணர்கள் ஆலோசனையுடன் முதல்வர் உத்தரவிட்டார். இதன்படி சென்னை, ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நோயாளிகளில் 60 பேர் இம்மாதம் 3,4ம் தேதிகளில் அரும்பாக்கத்தில் உள்ள தனியார் கல்லூரி சிறப்பு வார்டுக்கு மாற்றப்பட்டனர். டாக்டர் அரவிந்தன், சித்தா டாக்டர் வீரபாபு குழுவினர், அவர்களுக்கு ஒருங்கிணைந்த சிகிச்சை அளித்து வருகின்றனர். அலோபதி மருந்துகளுடன், கபசுர குடிநீர், சிறப்பு மூலிகை தேநீர், தூதுவளை சூப் உள்ளிட்ட சித்தா உணவுகள் வழங்கப்பட்டு வருகின்றது. தற்போது இவர்களின் உடல் நிலை வேகமாக முன்னேற்றம் அடைந்துவருகிறது. 3ம் தேதி முதல் 7ம் தேதி வரை தொடர் சிகிச்சை பெற்ற 15 பேருக்கு 7ம் தேதி கொரொனா சோதனை செய்யப்பட்டது. இதில் 15 பேருக்கும் முற்றிலும் குணமடைந்தது தெரியவந்தது. கூட்டு முயற்சியில் ஐந்து நாட்கள் சிகிச்சையில் இவர்கள் குணம் அடைந்துள்ளனர். விரைவில் அனைத்து சிறப்பு வார்டுகளிலும், அலோபதி, சித்தா டாக்டர்கள் ஒருங்கிணைந்த சிகிச்சை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளனர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

Advertisement