Advertisement

மத்திய அதிகாரி சொல்கிறார்

இந்தியாவில் ஜூன் ஜூலை மாதங்களில் கொரோனா உச்சத்தை அடையும் என்று சொல்லப்பட்டாலும், அரசாங்கம் சொல்லும் விதிமுறைகளை அனைவரும் கடைப்பித்தால் நிச்சயமாக வைரஸ் உச்சம் அடைவதை தடுக்க முடியுமென்று சுகாதாரத்துறை இணை செயலாளர் லாவ் அகர்வால் தெரிவித்தார். வைரசை ஒழிப்பது சுலபமான விஷயம் கிடையாது. அதனால் இந்த சூழ்நிலையில் வைரசோடு சேர்ந்து வாழ பழகிக்கொள்ள வேண்டும். அதவாது சமூகத்தில் கொரோனா வைரஸ் பரவல் இருந்தாலும், நாம் சில பழக்க வழங்ககங்களை மாற்றிக்கொள்ள வேண்டும். சமூக இடைவெளியை கட்டாயமாக கடைபிடித்து , ஒழுக்கத்தோடு இருப்பது தான் முக்கியமானது . அதற்கு தினமும் இவற்றை கடைபிடிக்க வேண்டும். கூட்டத்தில் ஒருவர் மட்டும் இதை கடைபிடிக்கவில்லை என்றால் கூட அது மற்றவர்களையும் பாதிக்கும் என்பதை நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும் என்று லாவ் அகர்வால் தெரிவித்தார்
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

Advertisement