Advertisement

மாதம் 2.5 லட்சம் வரை அரசு உதவி

அமெரிக்காவில் ஊரடங்கால் வேலை இழந்தவர்கள் எண்ணிக்கை 3.33 கோடியாக உயர்ந்தது. இவர்கள் அனைவருக்கும் வாராந்திர நிதி உதவி வழங்கும் பொறுப்பு அரசுக்கு இருக்கிறது. ஆனால், வரலாறு காணாத வகையில் மார்ச் மாதத்தில் 69 லட்சம் பேர் உதவிக்கு விண்ணப்பித்த போதே அரசு அதிர்ச்சி அடைந்தது. இப்போது அது மும்மடங்கு அதிகமாகி இருப்பதால், அரசுக்கு சுமை கூடிவிட்டது. வீட்டுக்குள் முடங்கி கிடப்பதை பெரும்பாலான அமெரிக்கர்கள் விரும்பவில்லை. வேலை செய்து அதிகமாக சம்பாதிப்பதையே விரும்புகின்றனர். கொரோனா வந்து செத்தாலும் பரவாயில்லை; கம்பெனிகளை திறக்க விடு! என்று கோஷம் போட்டு ஆர்ப்பாட்டம் நடத்துகின்றனர். என்றாலும், வேலை இழப்பால் எந்த அமெரிக்கனும் தற்கொலை செய்வது கிடையாது. ஏன் என்றால், பிழைப்பதற்கான நிவாரணம் என்ற பெயரில் அரசு அவர்களுக்கு நிதி வழங்குகிறது. மத்திய அரசின் இந்த உதவி, மாநில அரசுகள் மூலம் தரப்படுகிறது. ஒவ்வொரு மாநிலமும் ஒவ்வொரு விதமான தொழிலில் சிறந்து விளங்குவதால், நிவாரண தொகையை அதற்கு தகுந்தபடி அவர்களே முடிவு செய்கின்றனர். குறைந்த பட்சமாக ஒரு மாநில அரசு வாரம் 235 டாலர் கொடுக்கிறது. அதிகபட்சமாக இன்னொரு அரசு 783 டாலர் கொடுக்கிறது. எனவே வேலை போனாலும் அமெரிக்கர்கள் மாதம் 18,000 ரூபாய் முதல் இரண்டரை லட்சம் ரூபாய் வரை அரசின் நிவாரண தொகையாக பெறுகின்றனர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

Advertisement