Advertisement

மொபைல் பேமென்ட் செலுத்த ஏற்பாடு

மே 17 ல் ஊரடங்கு முடிந்த பிறகு பஸ் போக்குவரத்தை துவங்க அரசு திட்டமிட்டுள்ளது. இதையொட்டி, அனைத்து போக்குவரத்துக் கழக நிர்வாக இயக்குனர்களுக்கும் போக்குவரத்துத்துறை செயலாளர் தர்மேந்திர பிரதாப் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். பஸ்களை இயக்குவதில் 25 வழிகாட்டி நெறிமுறைகளை கடைப்பிடிக்கும்படி அறிவுறுத்தியுள்ளார். மாஸ்க் அணியாமல் பஸ்சினுள் பயணிகளை அனுமதிக்கக் கூடாது. ஒவ்வொரு ட்ரிப் முடிந்த பிறகும் பஸ்சை கிருமி நாசினி தெளித்து சுத்தப்படுத்த வேண்டும்; ஏறுவதற்கு பின்பக்க வழி, இறங்குவதற்கு முன்பக்க வழி என்பதை கண்டிப்பாக நடைமுறைப்படுத்த வேண்டும். 50 சதவீதத்துக்கு குறைவான பயணிகளுடன் பஸ்களை இயக்க வேண்டும்; சமூக இடைவெளியுடன் பயணிகள் உட்காருவதை உறுதி செய்ய வேண்டும் நிற்கும் பயணிகள் 6 அடி இடைவெளி விட்டு நிற்கும் வகையில் அடையாளக்குறிகள் இடப்பட வேண்டும் ஆகியவை சில நெறிமுறைகள். பயணிகளிடம் ரூபாய் நோட்டுகளை வாங்குவதை தவிர்க்க வேண்டும்; கியூ ஆர் கோட், மொபைல் பேமென்ட், பேடிஎம், கூகுள் பே, ஜியோ பே போன்றவை மூலம் டிக்கெட் கட்டணத்தை வாங்குவதை ஊக்கப்படுத்த போக்குவரத்துக் கழக அதிகாரிகள் முயற்சிகளை எடுக்க வேண்டும்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

Advertisement