Advertisement

பிரதமர் மோடி இரண்டாவது முறையாக பதவியேற்று ஓராண்டு

பிரதமர் மோடி இரண்டாவது முறையாக பதவியேற்று ஓராண்டு நிறைவடைய உள்ளது. இந்த ஓராண்டில் மத்திய அரசு செய்த சாதனைகளை, மே 30 ம் தேதி, சமூக வலைதளத்தில் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது. 'இன்னும் ஐந்து ஆண்டுகளில் நம் நாடு 350 லட்சம் கோடி ரூபாய் மதிப்புள்ள பொருளாதார நாடாக மாறும். அதற்கு அனைத்து அமைச்சகங்களும் இப்போதே முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும், என பதவியேற்றபின், மோடி தெரிவித்திருந்தார். இதற்கான செயல் திட்டங்களை அனைத்து அமைச்சகங்களும் தயாரித்துள்ளன. விவசாயத் துறை சீரமைப்பு, முதலீடு அதிகரிப்பு, தொழில் துறைக்கான ஊக்குவிப்பு தொடர்பான விபரங்களும் வெளியாக வாய்ப்புள்ளதாக மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

Advertisement